
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பலதரப்பட்ட ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் கடந்த நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நீ நான் காதல்'. இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் மற்றும் சாய் காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரை தாய் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. ராஜன் சுந்தரம் இத்தொடரை இயக்கி வருகிறார்.
'நீ நான் காதல்' தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், விரைவில் மதியம் 1 மணிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியத்தும் பெறும் (prime) நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த 'நீ நான் காதல்' தொடரை முக்கியத்துவம் பெறா (non prime) நேரத்துக்கு மாற்றப்படவுள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தற்போது மதியம் 1 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், இந்த நேரத்தில் 'நீ நான் காதல்' தொடரை ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.