கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல்.

News image
Updated On :28 மே 2024, 10:50 am

DIN

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரானார்.

இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

தற்போது, ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ’டிராகன்’ என்கிற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்காராவின் உதவி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் அதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.

நடிகை மமிதா பைஜூ சூப்பர் சரண்யா படத்தில் கவனம் பெற்றார். தொடர்ந்து, பிரேமலு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தென்னிந்திய ரசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.