பிரதமர் மோடி படத்தில் நடிப்பேன்: சத்யராஜ்!
நடிகர் சத்யராஜ், பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையில் நடிப்பது குறித்துப் பேசியுள்ளார்.


நடிகர் சத்யராஜ் 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக உள்ளார். ‘பாகுபலி’ திரைப்படம் இந்தியளவில் இவரைக் கொண்டு சென்றது.
தற்போது, கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு நண்பராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கும், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சத்யராஜ், “நான் மோடி படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தப் படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. ஒருவேளை, மறைந்த என் நண்பன் மணிவண்ணனைப்போல் உள்ளதை உள்ளபடி எடுக்கும் இயக்குநர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் மோடி வாழ்க்கைப் படத்தை எடுத்தால் நடிக்கலாம். படமும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.
நடிகர் சத்யராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த, ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...