முடிவுக்கு வருகிறது மக்களின் விருப்பமான தொடர்!

முடிவுக்கு வருகிறது மக்களின் விருப்பமான தொடர்!

ஜூன் 8 ஆம் தேதி முடிவடைகிறது எதிர்நீச்சல் தொடர்: ரசிகர்கள் அதிர்ச்சி!
Published on

சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்துகொண்டு செல்லும் பெண்களை மையப்படுத்தியும், அந்த வீட்டில் பிறந்த பெண்களை மையப்படுத்தியும் எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

முன்னதாக, ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து சிறப்பான நடிப்பை வழங்கிவந்தார். அவரின் நகைச்சுவை, நக்கல் கலந்த வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது.

முடிவுக்கு வருகிறது மக்களின் விருப்பமான தொடர்!
பாலி தீவு அல்ல... சொந்த கிராமத்துக்குச் சென்ற எதிர்நீச்சல் நாயகி!

மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் கதைக்களம் சூடுபிடித்து எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடர் ஜூன் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வரும் ஜூன் 8 ஆம் தேதியுடன் இத்தொடர் முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதால், அத்தொடர் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் தொடரை நீட்டிக்க வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இத்தொடர் முடிவுக்கு வரவுள்ளதால், இந்த நேரத்தில் ராகுல் ரவியும், கேப்ரியல்லாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடரான மருமகள் தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com