புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்தார்த்தின் மிஸ் யூ டீசர்!

மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :12 நவம்பர் 2024, 7:35 am

DIN

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது, காதல் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் ’மிஸ் யூ’ திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மிஸ் யூ படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.