தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கணவருக்காக பரிசுகளை அனுப்பிய மனைவி! பிக் பாஸ் வீடு தேடி வந்த ஆச்சரியம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகர் சிவக்குமாருக்கு அவரின் மனைவி சுஜா திருமண நாள் பரிசுகளை அனுப்பியுள்ளார்.

பிக் பாஸ் வீடு தேடி வந்த பரிசுகள் - படம் | எக்ஸ்

Published On :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகர் சிவக்குமாருக்கு அவரின் மனைவி சுஜா திருமண நாள் பரிசுகளை அனுப்பியுள்ளார்.

நடிகரும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவக்குமார் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இவர் நடிகர் சுஜா வருணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு அவர்கள் 6ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

சிவக்குமார், சுஜா வருணி தம்பதி

சிவக்குமார், சுஜா வருணி தம்பதி - படம் | எக்ஸ்

தங்கள் திருமண நாளையொட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள சுஜா வருணி,

''என் நிஜ வாழ்க்கை கதாநாயகனுக்கு திருமண நாள் வாழ்த்துகள். என்னுடைய மிகப்பெரிய பலம் நீங்கள். என்னை செலுத்துவது உங்கள் பலம்தான். என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களிலும் என்னுடன் நீங்கள் பயணித்து என்னை முன்னேற்றியுள்ளீர்கள். நீங்கள் அளிக்கும் அன்புக்கும், தைரியத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களைவிட சிறந்த துணையைக் கேட்க முடியாது'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருமண நாளையொட்டி பிக் பாஸ் வீட்டில் உள்ள தனது கணவருக்காக புதிய உடைகளையும், கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் சுஜா வருணி அனுப்பிவைத்துள்ளார். இதனை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

இவர்களின் திருமண நாளையொட்டி பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சுஜா வருணி ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான். இந்த சீசனில் ஏற்கனவே முந்தைய போட்டியாளரான ரம்யாவின் கணவரான சத்யாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சிவக்குமார் முந்தைய போட்டியாளரின் கணவராக கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.