இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாழை திரைப்படத்தின் மிகப்பெரிய வணிக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் - கார்த்தி கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: திருமணத்துக்குத் தயாரான சின்ன திரை தம்பதி!
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி - மாரி செல்வராஜ் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள நிலையில், விஜய் சேதுபதியுடன் இணைய இப்போது வாய்ப்பில்லை என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.