‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புஷ்பா - 2 புதிய இசையமைப்பாளர்!

புஷ்பா - 2 படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்து...

Published On :

புஷ்பா - 2 படத்திற்கு இசையமைக்க உள்ளதாக பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 திரைப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட உள்ளனர். படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் டிரைலர் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.

இதற்கிடையே, படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கான பின்னணி இசையை அமைப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால், படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் முழுப்படத்தையும் பார்த்ததைக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், சாம் சிஎஸ் தன் எக்ஸ் பக்கத்தில் புஷ்பா - 2 போஸ்டர் லுக்கை பகிர்ந்துள்ளார். இதன் அர்த்தம், படத்திற்கான பின்னணி இசையை இவர் இசையமைத்துள்ளதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.