பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரயான் - ராணவ் ஆகியோர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இன்றைய போட்டியில் விதிகளை மீறியதாக ராணவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ராணவ்வை, பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அடக்க முயன்றனர்.
அப்போது கோபமடைந்த ரயான், ஆத்திரத்தில் ராணவ்வை அடிக்கச் சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்த பலர் தடுத்தும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே பரபரப்பு நிலவியது.
விளையாட்டால் விபரீதம்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 53வது நாளான இன்று (நவ. 28) இரண்டாவது நாளாக நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான பொம்மையை தேர்வு செய்யலாம், ஆனால் தங்கள் பொம்மையை தேர்வு செய்ய முடியாது. தேர்வு செய்த பொம்மையை டால் ஹவுஸ்ஸில் எடுத்துச்சென்று வைக்க வேண்டும். தங்களுக்கு விருப்பம் இல்லாத பொம்மையை டாஸ் ஹவுஸ்ஸில் சென்று சேராமல் தடுக்கலாம்.
போட்டியாளர்களின் வியூகத்தையும் சகிப்புத்தன்மையையும் சோதிக்கும் வகையில் பொம்மை டாஸ்க் போட்டி வைக்கப்பட்டது.
இப்போட்டியில், ராணவ், தீபக், முத்துக்குமரன், தர்ஷிகா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியின்போது கோவா கேங் எனப்படும் செளந்தர்யா, ஜாக்குலின், ரயான், ஜெஃப்ரி ஆகியோரின் பொம்மையை வீட்டிற்குள் சென்று சேராமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு, ஜெஃப்ரி கையில் இருந்த பொம்மையை ராணவ் பிடுங்குகிறார்.
இதனால் கோபமடைந்த ரயான், ராணவ்விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களும் இருவரையும் தடுக்க முயன்றனர். எனினும் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயற்சித்தனர். ரயான் ராணவ்வை அடிக்கச் சென்றதால், பரபரப்பு நிலவியது.
ரயானைத் தடுத்து அழைத்துச்சென்ற ஜாக்குலின், ’ஏன் அவனை அடிக்கச் செல்கிறாய்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். 'அவன் என்னை அடிக்க வந்தான், அதனால் அவனை நான் அடித்தே தீருவேன்’ என ரயான் பதிலளிக்கிறார்.
இந்தச் சம்பவம் பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!