தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

முத்தழகு தொடர் முடிகிறது! கடைசிநாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

விரைவில் முத்தழகு முடியவுள்ள நிலையில், இறுதிக்காட்சி படப்பிடிப்பை முத்தழகு குழுவினர் நிறைவு செய்தனர்.

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முத்தழகு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் இத்தொடர் முடியவுள்ள நிலையில், இறுதிக்காட்சி படப்பிடிப்பை முத்தழகு குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஷோபனா, வைஷாலி தனிகா, ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த இந்த சீரியல், 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவந்த நிலையில், அடுத்த வாரத்துடன் இந்தத் தொடர் முடிவுக்கு வர உள்ளது.

விவசாய பெண்ணின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கினாலும் இடையே கதையே வேறொரு பக்கம் பயணித்தது. இரட்டை மனைவியுடனான கணவனை மையப்படுத்தி கதை நகர்ந்தது.

இந்நிலையில் முத்தழகு தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை குழுவினர் எடுத்துமுடித்துள்ளனர். இதில் இறுதிநாளில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை நடிகை வைஷாலி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைககாட்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அக். 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளதால், ஒருசில தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடயே பிக் பாஸ் தொடங்கும் வாரத்தில் முத்தழகு தொடர் முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.