நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் நடனமாடிய விடியோ கவனம் பெற்று வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி, பிரதர் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இறுதியாக, அவர் நடித்த சைரன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பிரதர் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் எம். ராஜேஷும் தொடர் தோல்விகளைக் கொடுத்துள்ளதால் எப்படியாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்புடன் இருக்கிறார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இளையராஜா பயோபிக்... திரைக்கதை, வசனம் எழுதும் எஸ். ராமகிருஷ்ணன்!
முக்கியமாக, பால் டப்பா என்பவர் பாடிய ‘மக்காமிஷி’ பாடல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களுக்கான பாடலாக அமைந்தது.
இப்படம் அக். 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதேநாளில் சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகிறது. இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் வணிகம் பாதிக்கப்படும் என்பதால் பிரதர் தேதியில் மாற்றம் வரும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக கல்லூரி மாணவிகளுடன் ஜெயம் ரவி மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.