/

சினிமாவில் கவர்ச்சிப் பொருளாக இருக்க மாட்டேன்: பிரியா பவானி சங்கர்

கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்...

News image
பிரியா பவானி சங்கர்
Updated On :6 அக்டோபர் 2024, 6:04 am

DIN

கவர்ச்சியாக நடிப்பது குறித்து பிரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

இவர் நடித்தவைகளில் சில படங்கள் தோல்வியடைந்ததால் அதற்குக் காரணம் இவர்தான் என ரசிகர்கள் கிண்டல் செய்தது வேதனையாக இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால், டிமான்ட்டி காலனி - 2 திரைப்படம் வெற்றி பெற்றதால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், “சினிமாவில் என் உடலை விற்பனைப் பொருளாக விற்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. என் உடலைக் கவர்ச்சியாகக் காட்டி வணிகம் செய்ய மாட்டேன். திரும்பிப் பார்க்கும்போது தவறான விசயத்தைக் கொடுத்துவிட்டோமோ என நினைக்கக் கூடாது.

எதிர்மறைக் கதாபாத்திரம் வந்தாலும் மறுக்காமல் நடிக்கத் தயார். இறுதியில் இது சினிமா, அவ்வளவுதான். ஆனால், பேஷன் என்கிற பெயரில் கவர்ச்சியாக உடலைக் காட்டக்கூடாது என உறுதியாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.