விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேட்டையனே இறுதி... உதயம் திரையரங்கம் மூடல்?

உதயம் தியேட்டர் இடிக்கப்படுவதாகத் தகவல்...

News image
உதயம் திரையரங்கம்.
Updated On :10 அக்டோபர் 2024, 7:21 am

DIN

சென்னையின் பிரபல திரையரங்கமான உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு திரைகளுடன் உதயம் திரையரங்கம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு திரைகளிலும் 750 பேர் வரை அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு திரையிடப்பட்டு வருகின்றன. ரஜினி, கமல் முதல் இன்றைய நட்சத்திர நடிகர்கள் வரை என பலருக்கும் சென்னையின் நினைவுகளில் ஒன்றாகவே இந்தத் திரையரங்கம் நீடிக்கிறது.

இந்த நிலையில், வேட்டையன் படத்துடன் உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மல்டிபிளக்ஸ் வளர்ச்சிகளுக்குப் பிறகு பழைய திரையரங்கங்கள் அதன் பொலிவை இழந்து வருகின்றன. இதனால், உதயம் திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இருப்பதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.