
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கோட் படத்தைவிட குறைவாக வசூலித்த வேட்டையன்..!
குட் பேட் அக்லியின் அஜித்தின் புதிய தோற்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் புதிய தோற்றத்தை வெளியிட்டு, “குட் பேட் அக்லி படப்பிடிப்பில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை முடியுனே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.