எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நானி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

நானியின் புதிய படத்தின் அப்டேட்...

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:32 am

DIN

நடிகர் நானியின் 33-வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இறுதியாக வெளியான, ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் வெற்றிப் படமானது.

அடுத்ததாக, இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ஹிட் - 3 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தன் 33-வது படத்தில் நடிக்கிறார். படத்திற்குத் தற்காலிகமாக நானிஒடேலா - 2 எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் பூஜை சில நாள்களுக்கு நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நானி நடித்த ஜெர்சி படத்திற்கும் அனிருத்தே இசையமைத்திருந்தார். தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.