மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்தார் 2: 2ஆம் கட்ட படப்பிடிப்பில் மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதை இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.

News image
சர்தார் 2 படப்பிடிப்பில் மாளவிகா
Updated On :22 அக்டோபர் 2024, 10:44 am

DIN

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் ஹிந்தி படத்தில் மாளவிகா நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தெலுங்கில் அறிமுகமாகும் மாளவிகா

தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.

தங்கலானுக்குப் பிறகு முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாவிருக்கிறார் மாளவிகா.

இயக்குநர் மருதி இயக்கும் தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடிக்கிறார்.

மீண்டும் சர்தார் 2 படப்பிடிப்பில்...

தற்போது தமிழில் சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளதை நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

2ஆம் கட்ட படப்பிடிப்பில் மாளவிகா...

2ஆம் கட்ட படப்பிடிப்பில் மாளவிகா...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.