நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய பனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் இயக்குநராக, ’பனி’ என்கிற படத்தை இயக்கி, நடித்து வந்தார். இந்தப் படத்தில் நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: புஷ்பா - 2 புதிய வெளியீட்டுத் தேதி!
இந்த நிலையில், பனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜுக்கு இயக்குநராக முதல் படமென்பதால் அவருடைய ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலர் சண்டைக்காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தாலும் கதையில் உணர்வுகள் கடத்தப்படவில்லை என கருத்து கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.