
ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் , கிளிம்ஸ் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.
தொடர்ந்து, படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இந்த நிலையில், இப்படம் செப். 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.