கன்னடத்தில் முக்கியமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். 1997 முதல் கன்னட சினிமாவில் நடித்துவரும் இவர் 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நான் ஈ, புலி, பாகுபலி, ரத்த சரித்தரம் ஆகிய திரைப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். தற்போது 4 நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஹனுமான் படத்தை தயாரித்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பில்லா ரங்கா பாட்ஷா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குகிறார் அனூப் பந்தரி.
ஏற்கனவே விக்ரந்த ரோனா படத்தில் அனூப் பந்தரியுடன் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
நடிகர் சுதீப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பிஆர்பி (பில்லா ரங்கா பாட்ஷா) படத்தின் கான்செப்ட் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் 2209ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாளில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்கி 2898 ஏடி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் வருங்காலத்தை பற்றிய படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.