ஆந்திரம், தெலங்கானா வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்!
ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.


ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.
இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 33 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் தெலுங்கில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், “சமீபத்தில் பெய்த கனமழையால் இரு தெலுங்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன.
இந்தத் துயரத்தில் இருந்து தெலுங்கு மக்கள் விரைவில் மீண்டுவர நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளின் வெள்ளப் பேரிடர் மீட்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக இரு மாநில அரசுகளின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எனது சார்பில் தலா ரூ.50 லட்சம் வழங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ’தேவாரா - பாகம் 1’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற செப். 27 அன்று இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...