சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கோட் தலைப்பில் சநாதனம்? விசிக எம்.பி. கேள்வி

கோட் படத்தின் தலைப்பை விசிகவின் எம்பி விமர்சித்தது பற்றி...

Ravikumar

விழுப்புரம் எம்பி ரவிக்குமார் - X

Updated On :

விஜய் நடித்த கோட் படத்தின் தலைப்பில் சநாதன கருத்து இருப்பதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி. ரவிக்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், சநாதன கருத்து என்று தெரிந்துதான் படத்துக்கு இந்த பெயரை வைத்தார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படத்தின் பெயரில் சநாதனம்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் முதல் படமான ’கோட்’டின் தலைப்பை விசிகவின் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

கோட் தலைப்பு குறித்து எக்ஸ் தளத்தில் ரவிக்குமார் தெரிவித்ததாவது:

“விஜய் படத்தின் தலைப்பில் ‘சநாதனம்’? தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது ஒரு சநாதனக் கருத்தில்லையா?

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சநாதனம்’ என்ற சொல்லின் பொருள்.

இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இதில் அரசியல் ரீதியான கருத்துகள் இடம் பெற்றுள்ளதா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், படத்தின் தலைப்பிலேயே சநாதனம் இருப்பதாக விசிக எம்பி குற்றம்சாட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.