ஹிமாச்சலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதையும் படிக்க: புதிய தொழில் துவங்கிய நடிகை சினேகா!
தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.

யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து நடித்துள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தயாரித்துள்ளார் யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கல்கி படத்தில் இணைந்த அன்னா பென்!

2019இல் உரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தினை இயக்கிய ஆதித்யா தார் படத்தில் நடித்தார். அங்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்து 2021-இல் திருமணத்தில் முடிந்தது.
இந்நிலையில் நடிகை யாமி கௌதம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மே மாதம் குழந்தை பிறக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தயாரிப்பாளரும் யாமி கௌதமின் கணவருமான ஆதித்யா தார், “இது லட்சுமியா அல்லது கணேஷா என்பது தெரியவில்லை. ஆவலுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

வடமலைசமுத்திரத்தில் இறந்த நிலையில் பெண் கரடி மீட்பு

வியாபாரியை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்ததாக புகாா்: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
பெரியகுளத்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



