ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசியலுக்கு வர மாட்டேன்: ஜேசுதாஸ்

பாடகர் ஜேசுதாஸ் எந்த அரசியல் கட்சிகளிலும் இணையப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2024, 9:30 am

DIN

பாடகர் ஜேசுதாஸ் தன் 84-வது பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டில் நேற்று (ஜன.10) எளிமையாகக் கொண்டாடினார். மலையாளம், தமிழ் மொழிகளில் மிகச்சிறந்த பாடகராக அறியப்படும் ஜேசுதாஸ், கேரளப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே மாறிய அளவிற்கு தன் குரலால் பல பாடல்களைப் பாடியவர்.

குறிப்பாக, ஹரிவராசனம். அய்யப்பனைக் குறித்து பாடப்பட்ட இப்பாடலை மதப்பாகுபாடின்றி அனைவரும் ரசிக்கின்றனர். காரணம், ஜேசுதாஸின் குரலிலேயே தெய்வீகம் இருப்பதாகத்தான் பல ரசிகர்களும் நினைக்கிறார்கள்.  நிறைய சாதனைகளைச் செய்தாலும் எப்போதும் ஜேசுதாஸைச் சுற்றி வரும் கேள்வி, அரசியலுக்கு வருவீர்களா? என்பதாகத்தான் இருக்கும். 

இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் அரசியல் குறித்த கேள்விக்கு ஜேசுதாஸ் பதிலளித்துள்ளார்.

அதில், “இப்போதும், நிறைய அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு வருகிறது. ஆனால், இளம் வயதிலேயே என் அப்பா என்னிடம் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டார். என் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீற விருப்பமில்லை. ரசிகர் மன்றமாவது துவங்குங்கள் என கோரிக்கை எழுந்தது. அதையும் செய்யவில்லை. எந்த சமூக வலைதளத்திலும் எனக்கு கணக்குகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.