ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

’பவதா..’ கடைசி புகைப்படத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!

மறைந்த பாடகி பவதாரிணியுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.

News image
Updated On :30 ஜனவரி 2024, 7:36 am

DIN

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா். 

அவரது உடலை, இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்தனர். 

நல்லடக்கம் செய்வதற்கு முன், பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைக் குடும்பத்தினர் பாடினர். அதில், இளையராஜாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

Story image

இந்நிலையில், இயக்குநரும் பவதாரணியின் சகோதரருமான வெங்கட் பிரபு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்” என பவதாரணியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், பவதாரணிக்கு வெங்கட் பிரபு அன்பாக முத்தம் தருகிறார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.