ப்ளூ ஸ்டார் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குநர் பா.இரஞ்சித், ஜெயக்குமார், துணை இயக்குநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: ’பவதா..’ கடைசி புகைப்படத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!
கடந்த வியாழக்கிழமை வெளியான ப்ளூ ஸ்டார் 4 நாள்களில் இந்திய அளவில் ரூ. 4.40 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
