தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

50% படப்பிடிப்பை நிறைவுசெய்த 7ஜி ரெயின்போ காலனி 2!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

7ஜி ரெயின்போ காலனி 2 போஸ்டர்.

Updated On :5 ஏப்ரல் 2025, 2:39 pm IST

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவுசெய்ததாக இயக்குநர் செல்வகராகவன் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார்.

இதில் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது:

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவடைந்தன.

முதல் பாகத்தில் இருந்தே அதே கதிரின் வாழ்க்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னானது என்பதை இந்தப் பாகத்தில் படமாக எடுத்து வருகிறோம்.

முதல் பாகத்தின் இறுதியிலேயே 2ஆம் பாகத்திற்கான சமிக்ஞையை அளித்திருப்போம்.

தற்போதைய காலங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.