
நடிகை த்ரிஷா தன் மீதான அவதூறுகளுக்காக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியான இடத்தை தக்கவைத்துள்ளார்.
41 வயதிலும் த்ரிஷா தமிழில் முதன்மையான நடிகையாக இருக்கிறார். அவரது இளமை இன்னும் குறையாமலே இருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
இருந்தாலும் த்ரிஷா மீது அடிக்கடி தேவையற்ற வதந்திகளும் அவதூறுகளும் அவ்வபோது சமூக ஊடகங்களில் பிற நடிகைகளின் ரசிகர்களினால் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது, குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா தேவையில்லை, ஏன் நடிக்க வேண்டும்? ஏன் புரமோஷன் செய்யவில்லை? என இப்படி தொடர்ச்சியாக விமர்சனங்கள் திட்டமிட்டே முன்வைக்கப்படுகின்றன.
இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா கூறியதாவது:
ஷப்பா.... டாக்சிக்கான மக்களே எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளத்தில் இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி மோசமான கருத்துகளை தெரிவிப்பதுதான் உங்களது அன்றைய நாளை நன்றாக்குகிறதா?
உங்களுடனும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைத்தால் மிகவும் வேதனையளிக்கிறது.
பெயரில்லாத, அடையாளமில்லா நீங்கள் நிச்சயமாக கோழைகளே! உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும்! எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.