ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எமகாதகி ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எமகாதகி ஓடிடி வெளியீடு தொடர்பாக....

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 8:59 am

DIN

எமகாதகி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தை இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜாதி, காதல், ஆணவப்படுகொலை போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரூபா கொடுவாயூர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக நரேந்திர பிரசாத் நடித்துள்ளார். ஒளிப்பதிவை சுஜித் மேற்கொள்ள சவுண்டில் சச்சின் மிரட்டியுள்ளார். இப்படத்துக்காக ரூபா கொடுவாயூர் 20 நாள்கள் பிணமாக நடித்துள்ளார்.

இந்நிலையில், எமகாதகி படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 14) வெளியாகிறது.

இதையும் படிக்க: ஓடிடியில் கிங்ஸ்டன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.