நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடாமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் மறுமுறை பார்ப்பதற்கான ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இப்படம் எதிர்பார்த்ததைவிட பெரிய வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி அஜித் அடுத்த கார் பந்தயத்துக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, அஜித் - 64 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி படத்தை முதல் நாள் முதல் காட்சியே கார்த்திக் சுப்புராஜ் பார்த்துவிட்டு, படம் நல்ல பொழுதுபோக்காகவும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
ரெட்ரோ படத்தின் வெளியீட்டுக்குப் பின் இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகான் - 2 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?
ஏ.ஆர். முருகதாஸ் - சிலம்பரசன் கூட்டணியில் புதிய படம்?
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

