காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!

நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த திருமண நிச்சயதார்த்தம்.
காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!
Published on
Updated on
1 min read

நடிகை ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மாடலிங் துறையில் 100-க்கும் விளம்பரங்களில் நடித்து பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த நடிகை ஜனனி, 2011-ல் பாலா இயக்கிய அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அசோக் செல்வனுடன் நடித்த தெகுடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜனனி, இப்படத்தில் இடம் பெற்ற விண்மீன் விதையில் பாடல்களுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தொடர்ந்து அதே கண்கள், பலூன், தர்மபிரபு, இப்படிக்கு காதல் உள்ளிட்ட தமிழ், மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

இந்த நிலையில், நடிகை ஜனனி நீண்ட நாள்களாக காதலித்து வந்த சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் கடந்த ஏப். 11 ஆம் தேதி ஜனனி - சாய் ரோஷன் ஷாமுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. ஜனனியின் திருமண அறிவிப்புக்கு அவரின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜனனியின் காதலர் சாய் ரோஷன் ஷாம் சென்னையில் பிறந்து வளர்ந்து துபையில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொகுப்பாளர் பிரியங்காவுக்கு திடீர் திருமணம்! வைரலாகும் விடியோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com