காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தக் லைஃப் முதல் பாடல்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.

தக் லைஃப் படத்தின் முதல் பாடலில் இருந்து... - படங்கள்: யூடியூப் / சரிகம தமிழ்

Published On :

நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்யோத்ரா என பலர் நடித்துள்ளார்கள்.

அதனால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு துவங்கப்பட்டு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தன.

படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசரில் கமல், சிம்பு ஆகியோரின் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ’ஜிங்குச்சா’ எனும் கமல்ஹாசன் எழுதிய இந்தப் பாடலை ஏப். 18 அன்று வெளியானது.

தற்போதுவரை (ஏப்.20) யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.

திருமண விழா பாடல் என்றாலே அது மணிரத்னம்தான் என ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.