
பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மிகவும் ஆவேஷமாகப் பேசியுள்ளார்.
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஏப்.22) சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் வரும் மே 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:
’’பஹல்காமில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக எனது பிறந்தநாளை படப்பிடிப்புக்கு மத்தியில் சிரிப்புடன் கொண்டாடினேன். காஷ்மீரில் உள்ள எனது நண்பர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்.
நேற்று நடந்தது இதயத்தை நொறுக்குவதாகவும் கோபத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது. உங்களை நீங்கள் பாதுகாப்புப் படை எனக் கூறிக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை சுடுவது துப்பாக்கிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் முட்டாள்தனமான தீவிரவாதிகளின் மிகவும் கோழைத்தனமான செயலாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்காவும் அவர்களது குடும்பத்திற்காகவும் ஆதரவாக நிற்கிறோம். காஷ்மீர் மக்களுடனும் ஆதரவாக இருக்கிறோம். இந்தக் கோழைகளை விரைவிலேயே சுத்தமாக நீக்கி விடுவோம் என நம்புகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.