முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்தெற்காசிய சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி!கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதற்காக ஆட்சியைத் தரவில்லை! எடப்பாடி பழனிசாமி கருத்துதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பாடல்கள்!

சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியாகியது.

டூரிஸ்ட் ஃபேமிலி போஸ்டர். - படம்: எக்ஸ் / ஷான் ரோல்டன்.

Updated On :

சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவையுடன் பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலரை இயக்குநர் அட்லி இன்று (ஏப்.23) மாலை வெளியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.