நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

பிரபல ராப் பாடகர் பாட்ஷா மீது வழக்கு!

பிரபல பாலிவுட் ராப் பாடகரான பாட்ஷாவின் புது பாடல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

News image

ராப் பாடகர் பாட்ஷா

Updated On :30 ஏப்ரல் 2025, 6:52 pm IST

பிரபல ராப் பாடகரான பாட்ஷாவின் மீது பஞ்சாப் மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் தனது ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களைப் பெற்றவர் பாடகர் பாட்ஷா (எ) ஆதித்யா பிரதீக் சிங் (வயது 39). இவர், தற்போது வெளியிட்டுள்ள ‘வெல்வட் ஃப்ளோ’ எனும் புதிய பாடலில் இடம்பெற்றுள்ள சொற்கள் மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளன.

அந்தப் பாடலில் அவர் ‘பைபிள்’ மற்றும் ‘சர்ச்’ உள்ளிட்ட கிறிஸ்தவ மதம் சம்பந்தமான சொற்களை அவமதிக்கும் வகையில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குளோபல் கிறிஸ்டியன் ஆக்‌ஷன் கமிட்டி எனும் அமைப்பின் பிரதிநிதியான இமானுவேல் மசிஹ் என்பவர் ராப் பாடகர் பாட்ஷா கிறிஸ்தவ மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பட்டாலா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று (ஏப்.29) கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.