
ஜவான் படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷாருக் கான் குறித்து இயக்குநர் அட்லீ நீண்டதாக காதல் கடிதம் போல நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் முதல்முதலாக ஜவான் படத்தின்மூலம் 71-ஆவது தேசிய விருது அறிவிப்பில் பெற்றார்.
சலேயா (தமிழில் ஹையோடா பாடல்) எனும் பாடலுக்காகவும் இந்தப் படத்திற்கு மேலும் ஒரு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் குறித்து அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் ஷாருக் சார். நமது படம் ஜவானுக்காக நீங்கள் தேசிய விருது பெற்றுள்ளதுக்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் உணர்ச்சிகரமாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்ததுக்கு நன்றி சார். இது எனது முதல் காதல் கடிதம். இன்னும் நிறைய வரும்.
படக்குழுவுக்கு நன்றி. ஜவான் படத்துக்கு சிறப்பான பாடல்களை அளித்த அனிருத்துக்கு சிறப்பான நன்றி. சலெயா பாடலுக்கு வாழ்த்துகள். ஷில்பாவுக்கு வாழ்த்துகள். அவருக்காக மிகவும் மகிழ்கிறேன்.
இவைகள் எனது வாழ்வின் முக்கியமான தருணங்கள். ஷாருக்கான் சார் உங்களுடன் இருப்பதே எனக்கு சிறந்த ஆசிர்வாதம்தான் சார். ரசிகனாக இருந்து உங்களுடன் பணியாற்றியது, உங்களை மாஸாக காண்பித்தது எல்லாமே கடவுளின் அருள் என நினைக்கிறேன்.
கடைசியாக கடவுள் நமக்கு நமது வாழ்வின் சிறந்த கணத்தை அளித்து கருணையைக் காட்டியுள்ளார். இதற்குமேல் என்ன கேட்பது, இதுவே போதுமானது. நான் உங்களின் (ஷாருக்) சிறந்த ரசிகன். லவ் யூ, லவ் யூ, லவ் யூ. அதீதமான அன்புடன் லவ் யூ சார் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.