

பிக் பாஸ் வீட்டில் மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் காட்சியை நடிகர் ப்ரஜின் நடித்துக்காட்டினார். இதற்கு ஏற்ப பின்னணியில் கண்ணே கலைமானே பாடலை கானா வினோத் பாடியது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ப்ரஜினின் உணர்வுப்பூர்வமான நடிப்புக்கு ஏற்ப ரயில் நிலையத்தின் பின்னணி ஓசைகளை கானா வினோத் எழுப்பியது பலரைக் கவர்ந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாள்களைக் கடந்துள்ளது. இந்த வாரத்தில் யாரும் வெளியேற்றப்படவில்லை. மாறாக முன்னாள் போட்டியாளரான ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார்.
பல நாள்கள் வெளியே இருந்து போட்டியைப் பார்த்துவிட்டு வருவதால், ஆதிரையின் ஆட்டம் பிக் பாஸ் வீட்டில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 59வது நாளான இன்று ப்ரஜின் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் காட்சியை நடித்துக்காட்டினார். ரயிலினுள் அமர்ந்திருக்கும் தனது காதலியான ஸ்ரீதேவிக்கு தன்னை நினைவூட்ட, நடைமேடையில் இருந்தவாறு கமல் செய்யும் முயற்சிகள் மிகவும் உருக்கமாக படமாக்கப்பட்டிருக்கும்.
அந்தக் காட்சியை நடிகர் ப்ரஜின் இன்று பிக் பாஸ் வீட்டில் நடித்துக்காட்டினார். அப்போது கானா வினோத் ரயில் நிலையத்தின் உணர்வைக் கொண்டுவர பின்னணி இசையைக் கொடுத்தார். முடிவில் கண்ணே கலைமானே பாடலையும் பாடி அவரின் நடிப்புக்கு உதவினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இருவரின் முயற்சிக்கும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன்றனர்.
இதையும் படிக்க | காதலரைக் கரம்பிடித்த ஆஹா கல்யாணம் நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.