

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோரால் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டிற்கும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் விதிகளை மீறும் வகையில் ஒலிவாங்கியை அகற்றிவிட்டு இருவரும் ரகசியம் பேசியதால், அனைவருக்குமான அடிப்படை உணவுப் பொருள்கள் மறுக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு இருவரும் ஒலிவாங்கியை அகற்றிவிட்டுப் பேசியுள்ளனர். இதேபோன்று இன்று காலையும் இதேபோன்று நடந்துகொண்டதால் ஆத்திரமடைந்த பிக் பாஸ் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டிற்கும் தண்டனை கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் பல முறை கூறியும் தொடர்ந்து விதிமீறலில் இவர்கள் ஈடுபட்டு வருவதால், பிக் பாஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் விஜே பார்வதி - கமருதீன் மீது கோபமடைந்துள்ளனர்.
இருவர் தவறு செய்ததற்கு ஒட்டுமொத்த வீட்டில் உள்ள போட்டியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், விஜே பார்வதியும் கமருதீனும் தவறை உணராமல் இருப்பதாகவும் சாண்ட்ரா விமர்சித்தார்.
இவர்கள் செய்த தவறுக்கு நாம் தண்டனை அனுபவித்து வருவதால், நாம் அனைவரும் சேர்ந்து இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூறி, விஜே பார்வதிக்கும் கமருதீனுக்கும் தோப்புக்கரணம் போட வைத்து தண்டனை கொடுத்தனர்.
பிக் பாஸ் வீட்டில் ஒலிவாங்கியை சரியாக மாட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விதியாக உள்ளது. இந்த சீசனில் பல இடங்களில் விஜே பார்வதியும் கமருதீனும் சரியாக ஒலிவாங்கியை மாட்டவில்லை என்பதை பிக் பாஸ் அவ்வபோது சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இருவரும் இருநாள்களாக தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால், அவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டின் முட்டை, பால் போன்ற அடிப்படை உணவுகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | அழுதாலும், சிரித்தாலும் நட்பே துணை! பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.