
சாம் சிஎஸ் குரலில் வெளியான ரெட்ட தல படத்தின் புதிய பாடல்!
ரெட்ட தல படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக...

நடிகர் அருன் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்படத்தின் புதிய பாடலான டார்க் தீம் பாடல் வெளியாகியுள்ளது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ரெட்ட தல திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆக்ஷன் திரில்லர் படமான இதில், நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்த கண்ணம்மா பாடல் தனுஷ் குரலில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இன்று(டிச. 12) புதிய பாடலான டார்க் தீம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
இதையும் படிக்க: பராசக்தி 3 ஆவது பாடல் புரோமோ!
Summary
New song from the movie retta thala released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






