ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (கோப்புப் படம்)
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (கோப்புப் படம்)AP
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் இயக்கத்தில் புதிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் “டிஸ்கிளோஷர் டே” உருவாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகை எமிலி பிளண்ட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு அறிவியல் (சயின்ஸ் பிக்‌ஷன்) திரைப்படமான டிஸ்கிளோஷர் டேவின் டீசரை படக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (டிச. 16) வெளியிட்டுள்ளனர்.

ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்களின் இயக்குநர் ஸ்டீவ ஸ்பீல்பர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டேவிட் கோயப் கூட்டணி மீண்டும் டிஸ்கிளோஷர் டே படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் புதிய படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

Summary

The teaser for the new film directed by renowned Hollywood director Steven Spielberg has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com