Aara Farming, Ajith's son.
ஆரா ஃபார்மிங், அஜித்தின் மகன். படங்கள்: எக்ஸ்/ விட்ஸ்தட் கோ ஹார்ட், மாலிக்.

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

நடிகர் அஜித் குமார் மகனின் வைரல் நடன விடியோ குறித்து...
Published on

நடிகர் அஜித்தின் மகன் ஆரா ஃபார்மிங் போல நடனமாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள அஜித்திற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அவரது மகன் செய்த செயல் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மலேசியாவில் உள்ள செபாங் சர்வதேச கார் பந்தயம் சர்க்யூட்டில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் சில வாரங்களாக பங்கேற்று வருகிறார்.

இவரது கார் பந்தய விடியோக்கள் உடனக்குடன் ஆவணம் செய்தும் வரப்படுகிறது. இது தொடராக வெளிவருமா அல்லது ஆவணப் படமாக வெளிவருமா என்பது பின்னர் முடிவுசெய்யப்படுமென இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு கார் ரேஸிங்கிற்கு சென்ற அஜித்தின் விடியோ வைரலானது.

இந்நிலையில், அவரது மகன் ஆரா ஃபார்மிங் போல படகினை இயக்குவது போல நடனமாடினார்.

யார் இந்த ஆரா ஃபார்மிங்?

ரய்யான் அர்கன் திகா என்ற 11 வயதான இந்தோனேசிய சிறுவன் இந்த ஆண்டின் மிகவும் வைரலானவர்களில் இருவனாக இருக்கிறான்.

படகுப்போட்டியின்போது மிகவும் பொறுமையாக, துளி பயமும் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் நடமாடிய காட்சிகள் பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் இதேபோல நடனமாடினார்கள்.

Summary

A video of actor Ajith's son dancing in a manner similar to Aara Farming is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com