

ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் உலகளவில் 16 நாள்களில் ரூ. 785 கோடி வசூலித்துள்ளது.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.
பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம், பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, படம் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற காட்சிகளும் 3.30 மணிநேரம் அளவுகொண்ட திரைப்படத்தில் பெரிய தொய்வாக அமையாதது படத்திற்கு பலமாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதியில் வெளியான துரந்தர், 16 நாள்களிலேயே ரூ. 785 கோடி வசூலைக் குவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ரூ. 500 கோடியைத் தாண்டிய 7-வது இந்தி படமாக துரந்தர் மாறியது.
ஹாலிவுட்டில் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் வெளியீட்டால், துரந்தர் வசூல் சற்று குறைந்தாலும், வெளிநாடுகளில் ரூ. 165.7 கோடி வரையில் வசூலித்துள்ளது.
மேலும், இந்தாண்டின் அதிக வசூல் படமான காந்தாரா முதல் பாகத்தைவிட (ரூ. 852 கோடி) துரந்தர் முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.