பிக் பாஸ் 9 போட்டியில் ஆடைகளுக்காக மட்டும் ரூ. 2 லட்சம் கொடுத்தேன்: கமருதீன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க துணிக்காக மட்டும் ரூ. 2 லட்சம் வரை கொடுத்துள்ளதாக கமருதீன் தெரிவித்துள்ளது குறித்து..
Bigg Boss 9 competition Kamaruden
கமருதீன்படம் - எக்ஸ்
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு துணிக்காக மட்டும் ரூ. 2 லட்சம் வரை கொடுத்துள்ளதாக கமருதீன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு சாதகமாக சமூக வலைதளங்களில் வாக்கு சேகரிப்பதற்காக பிஆர் டீம் எனப்படும் மக்கள் தொடர்புத் துறையை பணம் கொடுத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பிக் பாஸ் சீசன் 9 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் பணம் கொடுத்து தனக்கென தனியாக குழுவை வெளியே வைத்துவிட்டு உள்ளே வந்திருப்பார்கள் என ஒவ்வொரு போட்டியாளரும் கூறி வந்தனர்.

அந்தவகையில் சுபிக்‌ஷாவும் திவ்யாவும் தனது விடியோக்களை அதிகம் மக்களிடம் பகிர தனியாக குழுவை வைத்துவிட்டு வந்திருப்பார்கள் என கானா வினோத் விமர்சித்தார். தான் வாடகை கொடுக்கவே வழி இல்லாமல்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், பிஆர் டீம் வைத்து பணம் கொடுக்கும் அளவுக்கு தான் இல்லை எனவும் கூறினார்.

இதேபோன்று, கமருதீன் தனியாக பிஆர் டீம் வைத்திருப்பார் என விஜே பார்வதி குற்றம் சாட்டினார்.

பிறகு பேசிய கமருதீன் பார்வதி கட்டாயம் தனக்கென தனி குழுவை நியமித்துவிட்டுதான் பிக் பாஸ் வந்திருப்பார் எனக் கூறினார்.

மக்கள் தொடர்பு குழுவுக்காக 30 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருப்பார் என விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது, நான் விஜய் டிவியின் தயாரிப்பு. ஆனால், உங்களிடம் ஏற்கெனவே அதிகம் பணம் இருக்கிறது. அதனால் நீங்கள் என்ன தொகை வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம். நான் என்னுடைய ஆடைகளுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்துவிட்டு வந்தேன் எனக் கூறினார்.

இது தொடர்பான விடியோ சமூக வலைதளப் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உடைகளுக்காக மட்டும் ரூ. 2 லட்சம் வரை கமருதீன் செலவிட்டுள்ளாரா? என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Bigg Boss 9 competition Kamaruden
பிக் பாஸ் கமருதீனை தத்தெடுக்கத் தயார்: பாடகி சுசித்ரா அதிரடி!
Bigg Boss 9 competition Kamaruden
ஜனநாயகன் படத்தின் கதையைக் கூறிய பிக் பாஸ் ப்ரஜின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com