திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை - தகவல்!

தனுஷ் நடிக்கும் இளையராஜா படம் குறித்து...

Published On :

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படம் கைவிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பண்ணைபுரத்தில் இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்காக 1950-களின் பண்ணைபுரத்தை செட் மூலம் அமைக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளார். இவரும் இளையராஜாவும் அடிக்கடி சந்தித்து படத்தில் என்னென்ன காட்சிகள் எப்படி இடம்பெற வேண்டும் என்பது குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தன.

இதற்கிடையே, தனுஷ் ராயன் படத்தில் நடித்தார். அப்படத்திற்குப் பின் இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்க சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் படத்திலும் தமிழில் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்திலும் தனுஷ் நடிக்கிறார். மேலும், அருண் மாதேஸ்வரன் ஹிந்தி படமொன்றை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனால், இளையராஜா படம் கைவிடப்பட்தாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படம் கைவிடப்படவில்லை என்றும் சில மாதங்கள் கழித்து படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.