அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image
Updated On :12 பிப்ரவரி 2025, 7:44 am

DIN

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தன் படிப்பை முடித்ததும் இயக்குநராகும் ஆசையில் சில குறும்படங்களை இயக்கினார். தொடர்ந்து, கடந்த ஆண்டு லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் இயக்குநராக அறிமுகமாகிறார் என அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், படப்பிடிப்பு துவங்காமல் இருந்ததால் படம் கைவிடப்படலாம் என கூறப்பட்டது. பின், சில மாதங்களுக்கு முன் படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாள்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சன் பின்னணியில் படத்தை கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.