இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இது டான் 2 அல்ல, டிராகன்..! நல்ல வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்!

டிராகன் படத்துக்கு வரும் ஆதரவுக்கு நெகிழ்ச்சியடைந்துள்ளார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி.

Published On :

டிராகன் படத்துக்கு வரும் ஆதரவுக்கு நெகிழ்ச்சியடைந்து பேசியுள்ளார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இன்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.

டிராகன் போஸ்டர்.

டிராகன் போஸ்டர்.

டிரைலரைப் பார்த்து சமூக ஊடகங்களில் இது டான் 2 என கிண்டல் அடிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் பங்கேற்ற பல்வேறு நேர்காணல்களிலும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படம் வரட்டும் தெரியும்” எனக் கூறியிருந்தார்.

காலையில் பூம்பாறை முருகன் கோயிலில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சாமி தரிசனம் செய்திருந்தார்.

தற்போது, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியடைந்து திரையரங்கு ஒன்றில், “இது டான் 2 அல்ல, டிராகன்” எனக் கூறி நடிகர் பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களை நெகிழ்ச்சியாக கட்டிப் பிடிப்பார்.

இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

ஓ மை கடவுளே இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு இது 2ஆவது படம். அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.