தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

முபாசா இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்!

இந்தியாவில் முபாசா வசூல் குறித்து...

News image
Updated On :5 ஜனவரி 2025, 4:06 pm IST

முபாசா திரைப்படம் இந்தியளவில் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தி லைன் கிங் (the lion king) திரைப்படம் 2019 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரேதான் தி லயன் கிங் படத்தை இயக்கினார்.

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 178 கோடி வசூலித்தது.

தற்போது ’முபாசா தி லயன் கிங்’ படத்துக்கு ஜெப் நாதன்சன் திரைக்கதையில் பெர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

இது, 2019 இல் வெளியான தி லயன் கிங் படத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர் அர்ஜுன் தாஸ், நாசர், ரோபோ சங்கர், சிங்கம் புலி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர்.

தெலுங்கு பதிப்பில் முபாசா கதாபாத்திரத்துக்கு நடிகர் மகேஷ் பாபுவும் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 3500 கோடியையும் இந்தியாவில் ரூ. 150 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.