‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டிரைலர்!

டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மம்மூட்டியின் டிரைலர் பட காட்சிகள். - படங்கள்: யூடியூப் / மம்மூட்டி கம்பெனி

Published On :

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள மடோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளனர். துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருப்பதாகத் தெரிகிறது.

மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் நகைச்சுவை கலந்தும் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைலரை பார்க்கும்போது இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.