வெளி மாநிலங்களில் ஜெயிலர் - 2  படப்பிடிப்பு!

வெளி மாநிலங்களில் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு!

ஜெயிலர் - 2 குறித்து...
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவை வெளியிட்டது.

அதில், ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருவதால் ஏப்ரல் மாதம் ரஜினி ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் நடத்த இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்திலும் தில்லி, ராஜஸ்தான் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com