திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

காஞ்சனா - 4 படப்பிடிப்பு துவக்கம்?

காஞ்சனா - 4 படப்பிடிப்பு குறித்து...

Published On :

காஞ்சனா - 4 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது. பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.

அண்மையில், ராகவேந்திரா புரடக்‌ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதில், பேய் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜன. 23 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் இந்திய படமாக உருவாகும் இதை, இந்தாண்டு ஆகஸ்ட் வெளியீடாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.