டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய ’ஏன் டி விட்டுப் போன’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள டிராகன் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் 'ஏன் டி விட்டுப் போன' பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், மரியம் ஜார்ஜ், சித்ரா, விஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதுவரையில், நடிகர் சிலம்பரசன் குரலில் வெளியான பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையே பெற்றுள்ளன.
நடிகர் சிலம்பரசன் குரலில், குறிப்பாக காதல் தோல்வி பாடல் என்பதால், டிராகன் படம் மீதான ஆவல் அதிகரிப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டிராகன் படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில்தான் வெளியிடப்படவிருப்பதாக முதலில் அறிவித்தனர். ஆனால், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதியில் வெளியிடப்படவிருப்பதால், டிராகன் படத்தின் தேதியை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக டிராகன் படக்குழுவினர் அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆத்தி ராசாத்தி... கருப்பு படத்தின் பாடல் விடியோ!
ஜெயிலர் - 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன்?

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



